மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த கோரி கோவையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த கோரியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் மணிப்பூர் மக்கள், பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் கோவை வாழ் மணிப்பூர் மக்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கோவையில் வசிக்கும் மணிப்பூர் மக்கள், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி நிலவ வலியுறுத்தியும், பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தும் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "Justice Delayed is Justice Denied, Hang Rapist, Our Future Not Safe in Manipur, Pray For Manipur Violence" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...