கோவையில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் - ரயில்வே சங்கங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா!

தென்னக ரயில்வேக்கு வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பை வழங்கும் கோயம்புத்தூரில் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே சங்கங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.


கோவை: கோவையில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே சங்கங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவையில் புதிய ரயில்களை பராமரிப்பதற்கான பிட்லைன் மற்றும் ஸ்டேபிளிங் லைன் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை ரயில்வே வாரியம் மண்டல மற்றும் கோட்ட அதிகாரிகளிடம் கேட்கிறது. பராமரிப்பு வசதிகளில் உள்ள தடைகள் காரணமாக, கோயம்புத்தூரில் இருந்து புதிய ரயில்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த தடைகளை சமாளிக்க, தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம், இந்த உள்கட்டமைப்பை உருவாக்க கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் போத்தனூர் கூடுதல் பிட் லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் மற்றும் சில வசதிகளை முன்மொழிந்தது.

சேலம் கோட்டம், தெற்கு ரயில்வேயில் உள்ள தலைமையகத்துக்கு, விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக அனுப்பியது. இந்த திட்டத்திற்கான நிதி ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூருக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பை வழங்கும் கோயம்புத்தூரில் உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான ஒப்புதலை உடனடியாக அனுப்புமாறு தென்னக ரயில்வே பொது மேலாளரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.

இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்களும், பெங்களூரு, சென்னை எழும்பூர், காரைக்கால், திருச்செந்தூர், போடிநாயக்கனூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய ரயில்களும் இயக்கப்படும்.

நகரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வது முன்கூட்டியே திட்டமிட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவது ரயில்வேயின் பொறுப்பு.

கோவையை பொருத்தவரையில் எதிர்பார்ப்பது நியாயம். ஏனெனில் அந்த அளவிற்கு ரயில்வேக்கு மட்டுமே இல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...