உடுமலை திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கூடுதலாக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கூடுதல் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் வண்டல் மண் 34,000 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு எடுத்தது போக மீதமுள்ள 17,000 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு பல மாதங்களுக்குப் பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கி உள்ளார்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி கோரும் விவசாயிகள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.



வண்டல் மண் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை எனவே விவசாயிகள் நலன் கருதி திருமூர்த்தி அணையில் வண்டல் மண் கூடுதலாக எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வண்டல் மண் அதிக அளவு எடுக்கும் பொழுது திருமூர்த்தி அணையில் கூடுதலான தண்ணீர் திறக்க முடியும். இதனால் பாசனத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...