சூயஸ் நிறுவனத்திற்கு அடிபணிய கூடாது - கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிபிஎம் கட்சியினர்!

ஏழை மக்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை எடுக்க கூடாது, சூயஸ் நிறுவனத்திற்கு அடிபணிய கூடாது என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



.

கோவை: சூயஸ் நிறுவனத்திற்கு அடிபணியக் கூடாது என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தை சிபிஎம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஏழை மக்கள் குடியிருப்பில் உள்ள பொது குழாய்களை அகற்றக்கூடாது. சூயஸ் கம்பெனிக்கு அடிபணிய கூடாது வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும்.

குடியிருக்கும் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். வரி விதிப்பு இல்லை என குடிநீரை கொடுக்க மறுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



கோஷங்கள் எழுப்பியபடி மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.



இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...