கோவையில் வரும் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.



கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருகிற ஐந்தாம் தேதி கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 250 க்கு மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்களின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது இதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.



இது சம்பந்தமாக கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவன், மாவட்ட ஆட்சித் தலைவர் கிரந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள் மீனா லோகு, இளஞ்செல்வி கார்த்திக், மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...