மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் மனித சங்கிலி போராட்டம்!

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க அரசை கண்டித்தும், பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்தும், கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்து முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



கோவை: மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அனைத்து முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களின் சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறைக்கும், பெண்கள் பாதுகாப்பின்மைக்கும் காரணமான பாஜக அரசை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக அனைத்து முற்போக்கு -ஜனநாயக இயக்கங்கள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், எஸ்டிபிஐ, புரட்சிகர இளைஞர் இயக்கம் உட்பட 15 க்கு மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மனித சங்கிலி போராட்டத்தின் போது மணிப்பூரில் அமைதி நிலவவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எனவும் வலியுறுத்தப்பட்டது. 80 நாட்களாக ஒரு மாநிலம் பற்றி எரிகின்றது, கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தீ வைத்து எரிக்கபட்டுள்ளது,



பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு அவமானபடுத்தபடுகின்றனர். இதை தடுக்கவோ, அமைதியை ஏற்படுத்தவோ, அரசியல் ரீதியாக பதில்சொல்ல மோடி தலைமையிலான மத்திய அரசோ, அமித்ஷாவோ தயாராக இல்லை.



அமைதி காக்க தவறிய மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும், பொருள் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்திய நாடே மணிப்பூர் ஒற்றுமையை விரும்புகின்றது. மனிதசங்கிலியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...