பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீத கிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசாங்கத்தால் குறிப்பிட்டுள்ள திட்ட குறைதீர்ப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் பிரதான் மந்திரி யோஜனா (ஊரகம்) திட்ட பயனாளிகளிடம் இருந்து வரப்பெறும் புகார்களை பெற்று, அதனை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது,

பிரச்சனை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்துவது, வலை தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொகையினை தாமதமாக வழங்குதல் அல்லது தொகை வழங்காதது தொடர்பான பல குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கைகளை எடுப்பது என அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து மேல் நடவடிக்கை மேற்கொள்வார்.

எனவே, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன (ஊரகம்) திட்டம் தொடர்பான குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு பொது மக்கள் திட்ட பயனாளர்கள், கோயம்புத்தூர் மாவட்ட குறைதீர்ப்பாளர் நவநீதகிருஷ்ணன் என்பவரை 9443474364 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலகம் சார்ந்த கைபேசி எண் 8925811303ல் தொடர்பு கொள்ளலாம். எழுத்து வடிவிலான புகார்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் குறைதிர்ப்பாளரிடம் நேரில் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...