மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் 2 பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவத்தை கட்டுப்படுத்த தவறி பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கண்டித்து கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், பத்மநாபன் உள்பட தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்தும், பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...