வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்!

கோவையில் நாளை நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமை, வேலை வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இம்முகாமில் குறைந்தபட்ச மாத சம்பளம் 10,000 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.



கோவை: கோவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) மேட்டுப்பாளையம் சாலை ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.



இந்நிலையில் வேலை வாய்ப்பு முகாமின் ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்குகள், அடிப்படை வசதிகள் ஆகிய பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர்,



கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 5ம் தேதி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்காக தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் ஆணையாளராக இவர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டத்திற்கு அளித்துள்ளனர். அதன்படி முகாமில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் கலந்து கொள்ள தற்பொழுது வரை 257 நிறுவனங்கள் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம் இயங்கி வருகிறது.

வேலைவாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் இளைஞர்கள் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் இந்த முகாமில் குறைந்தபட்ச மாத சம்பளம் 10 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

அதேபோல் முகாம் நடைபெறும் நாட்களில் உணவு குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். மேலும் கல்லூரியின் சார்பிலும் வேலைவாய்ப்பிற்கு வரும் இளைஞர்களுக்கு வழி காட்டுவதற்கு உதவியாளர்கள் உள்ளனர்.

இன்ஜினியரிங், ஹெல்த் கேர், உட்பட அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிறுவனங்கள் வருகை புரிவர், பெரும்பாலும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் கருணாகரன், வேலைவாய்ப்பு துறை அலுவலர் விஜயலட்சுமி வட்டாட்சியர் தங்கராஜ் உட்பட கல்லூரி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...