தேசிய கைத்தறி தினம் - கோவையில் இளம் பெண்கள் கைத்தறி தின அணிவகுப்பு!

கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் சேவை மையம் சார்பில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒருங்கிணைப்பில், கைத்தறி ஆடைகளுக்காக ஃபேஷன் ஷோ மற்றும் இளம் பெண்கள் கைத்தறி ஆடை அணிந்த அணிவகுப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.


கோவை: கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை ஃபேஷன் ஷோ மற்றும் ஆடை அணிவகுப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம் ஜோன் நிறுவனம் சார்பில் தொடர்ந்து ஆண்டுதோறும் "தேசிய கைத்தறி தினத்தை" முன்னிட்டு நடைபெற்று வரும் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு விழா நடைபெற்றது.



நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கடந்த 2015 ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.



அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.



இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது.

கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கைத்தறி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டும் இளைஞர்கள் மத்தியில் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை கல்லூரிகளில் ‘ஃபேஷன் ஷோ’ மற்றும் கைத்தறி ஆடையுடன் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஒருங்கிணைத்தார். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முதல் நோக்கம்.



தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் முற்றிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கைத்தறியிலான தாவணி, சேலை போன்ற ஆடைகளே அணிந்து வந்தனர்.



கைத்தறி ஆடைகள், நெசவாளர்கள் என இதுகுறித்த விழிப்பு உணர்வை இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் கோவை காஸ்மோ பாலிடன் கிளப் முதல் ரேஸ்கோர்ஸ் மாவட்ட கலெக்டர் பங்களா வரை நடைபெற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பில் ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...