வீடு கட்டி தருவதாக ரூ.8.7 லட்சம் வரை மோசடி - ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் தான் சூலூரில் வாங்கிய நிலத்தில் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.8.7 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கறிஞர் தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வீடு கட்டி தருவதாக கூறி ரூ.8.7 லட்சம் வரை மோசடி செய்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் சூலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு இடம் வாங்கி உள்ளார். மேலும் அதில் வீடு கட்டி தருவதாக ஏமாற்றியதாக மேஸ்திரி சித்திரைநாதன் என்பவருக்கும் இந்திராணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காண தமிழரசன் என்ற வழக்கறிஞரை இந்திராணி நாடிய நிலையில் தமிழரசன் தீர்வு கண்டு தருவதாக கூறியுள்ளார். மேலும் சித்திரைநாதனுக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பணத்தை இந்திராணியிடம் தமிழரசனிடம் பெற்றுக் கொண்டு, பணத்தை சித்திரைநாதனிடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் வழக்கறிஞர் தமிழரசன் தான் பொறியியல் படிப்பு படித்து உள்ளதாகவும், அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறி ரூபாய் 8 லட்சத்தி 70,000 பணத்தை பெற்றுக் கொண்டு கட்டிடத்தின் பேஸ் மட்டத்தை மட்டும் கட்டிவிட்டு நீங்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்றும் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதுகுறித்து இந்திராணி கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கறிஞர் சங்கத்தில் புகார் கூறியதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய தலைவர் மீதித் தொகையை திருப்பி வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என்று கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....