கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் - வருமானவரித்துறை அறிவிப்பு

கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்த தேதி கட்டாயம் நீட்டிக்கப்படாது எனவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவையில் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார், முதன்மை ஆணையர் திருமலைக்குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய கிருஷ்ணகுமார், மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பின் ஒரு கட்டமாக கருப்பு பணத்தை கணக்கில் காட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் வருகிற மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் கருப்பு பணம் குறித்த தங்கள் தகவல்களை வருமான வரித்துறையில் அளித்து அபராதம் மட்டும் செலுத்தி சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து விளக்கு பெறலாம் எனக்கூறிய அவர் இந்த திட்டம் கட்டாயமாக மார்ச் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

கடந்த 2 வாரங்களில் கோவை மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்துள்ளதாகவும் இதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். கருப்பு பணம் தொடர்பான தகவல்களை அளிக்க சலான் 287ஐ மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...