கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணம் கொள்ளை!

கோவை பீளமேடு புதூர் அருகே தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரான ராஜேந்திரன், தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.


கோவை: கோவை பீளமேடு புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரில் இருந்தவாறு செல்போனில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிசிடிவி வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் நபர் ஒருவரை வீட்டில் சென்று பார்க்க சொன்னதாக தெரிகிறது. அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணமும் மாயமானது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி டிவிஆர்-யும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேந்திரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...