ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 29-ல் கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என்றும் அதற்கு பதிலாக செப்.2 ஆம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.


கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2023-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஓணம் பண்டிக்கு 29ம் தேதி விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிர்வரும் 02.09.2023 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881) இன் கீழ் வராது என்பதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...