சித்தாபுதூர் மேல்நிலை பள்ளியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி!

கோவையில் பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்தவும், தரமான கல்வியை உறுதி செய்யவும் தமிழக அரசு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி வழங்க முடிவு செய்துள்ள நிலையில், சித்தாபுதூர் மேல்நிலை பள்ளியில் மாநகராட்சி உறுப்பினர்கள் 100 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை சித்தாபுதூர் மேல்நிலை பள்ளியில் மாநகராட்சி உறுப்பினர்கள் 100 பேருக்கும் பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்தவும், அரசு பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடந்த 7ஆம் தேதி முதல் வரும் 22ஆம் தேதி வரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளை சேர்ந்த 198 உறுப்பினர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளை சேர்ந்த 513 உறுப்பினர்கள் ஆகியோருக்கு மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்றைய தினம் மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட கருத்தாளர்களான ஆசிரியர்கள் சுபிதா, ரம்யா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா, பிரேமா ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர்.



அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி தர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...