கோவையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் - பாமக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாமக நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆவணங்களுடன் அசோக் ஸ்ரீநிதி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறது.

ஒரு ஸ்மார்ட் போர்டு 2 லட்சம் ரூபாயாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் என ஸ்மார்ட் போர்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரியவந்தது.

மேலும் இணைய சேவை பராமரிப்பு செலவுகளை கணக்கிட்டாலும் கூட ஒரு ஸ்மார்ட் போர்டுக்கு 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது.

அதேசமயம் இத்திட்டத்தில் தொகுதி நிதியை தொகையாக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது, ஊரக வளர்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் டெண்டர் பணிகள் மூலம் தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...