கோவையில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோவை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் விதிமீறல் புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு 44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாகவும் கூறி பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக, நான்கு கல் குவாரிகளுக்கு, கோவை மாவட்ட நிர்வாகம், 44 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் உள்ள 140 குவாரிகள் வருவாய்த்துறை மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. விதிமீறல் செய்பவர்களுக்கு அதிகாரிகள் அதிக அபராதம் விதித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள ஏழு குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வருவாய்த்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல் குவாரிகளுக்கு 44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...