தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்க கூடாது - பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மனு!

தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் பேருந்தில் சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுக்க அரசாணை வெளியிட்டதாக கூறி தனியாருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி கோவை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க கூட்டமைப்பினர் இன்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



அண்ணா சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் செல்ல முற்பட்ட நிலையில், காவல் துறையினர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் முன்பாக தடுத்து நிறுத்தினர்.



ஊர்வலமாக செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்கள் பேருந்துகள் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.



ESI, PF பணத்தை எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை நீக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, காலை 7 மணிக்கு வேலை நேரம் போன்றவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர். தூய்மை பணிகளை ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுக்க கூடாது.



ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

மேலும், செப்டம்பர் 15 ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து தூய்மை பணியாளர் சங்கங்களையும் சந்தித்து அவர்களையும் ஒருங்கிணைத்து தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கு எதிராக இயக்கம் நடத்த போவதாகவும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...