நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் – நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் நீர்த்தேக்க அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நீதிமன்ற ஆணைப்படி அணைக்கட்ட கையப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதற்கு பூஜை செய்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அனைக்கு கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தி 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பு தொகை மற்றும் அதற்குண்டான வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் என 2019-ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டன.

ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து கோனாபுரம் கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதற்கு பூஜை செய்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...