தமிழக சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது - அமைச்சர் ரகுபதி பெருமிதம்..!

கோவையில் 2வது சிறைத்துறையின் பிரீடம் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் ரகுபதியும், முத்துசாமியும் கூட்டாக திறந்து வைத்தனர்.


கோவை: இந்தியாவில் தமிழகம் சிறைத்துறையில் 1வது இடத்திற்கு வந்துள்ளதாகவும், உணவகத்தில் கிடைக்காத அளவிற்கு உணவு சிறைத்துறையில் வழங்கப்படுவதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக சிறை அங்காடிகள் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய சிறை, கோவை புழல், வேலூர் பாளையங்கோட்டை, மற்றும் பார்சல் பள்ளி புதுக்கோட்டை ஆகிய ஐந்து சிறை வளாகங்களில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறை துறையால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு, பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் "ப்ரீடம் பில்லிங் ஸ்டேஷன்" என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து "ப்ரீடம் பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில்" மொத்த விற்பனை 847.31 கோடி ரூபாய் அளவிலும், லாபம் ரூபாய் 23.94 கோடியும், அதில் சிறை வாசிகளின் ஊதியம் 2.37 கோடி ரூபாய் என்ற நிலையில், கோவையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பிரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் கடந்த மாதம் வரையில் மொத்த விற்பனை 253.75 கோடி ரூபாயும், மொத்த லாபம் ரூபாய் 8.65 கோடியும் மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் 69.10 லட்சமாக உள்ளது.

இந்நிலையில், கோவையில் 2வது சிறைத்துறையின் பிரீடம் பெட்ரோல் விற்பனை நிலையம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பாரதியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த பெட்ரோல் பங்கினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.



உடன், சிறைத்துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி, கோவை சரக சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம், ஐ.ஓ.சி.எல்., தலைவர் ஆகியோர் இருந்தனர்.



விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் தமிழகம் சிறைத்துறையில் 1வது இடத்திற்கு வந்துள்ளதாகவும், உணவகத்தில் கிடைக்காத அளவிற்கு உணவு சிறைத்துறையில் வழங்கப்படுகிறது என்றார். 45 ஆண்டுகளுக்கு பிறகு உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...