கன்னிவாடி சந்தையில் ஆடு விற்பனை சூடுபிடிப்பு - 10 கிலோ ஆடு 7,500 ரூபாய்க்கு விற்பனை

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கன்னிவாடி ஆடுச்சந்தையில் வரத்து குறைந்து காணப்பட்டதால் போனவாரத்தை விட இந்தவாரம் ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின.


திருப்பூர்: மூலனூர் பகுதியில் போதிய தீவனம் இருப்பதால், ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் முன்வருவதில்லை என்றும், இதனால்தான் வரத்து குறைந்து காணப்பட்டதால் இந்தவாரம் சந்தையில் ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதும் என்றும் வியபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.

இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவற்றை வாங்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை சேர்ந்த வியாபரிகள் வந்திருந்தனர்.

சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது. விலை உயர்வு மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது.

இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று வியபாரிகள் கூறினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...