நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் - சமத்துவத்தை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி!

நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.




கோவை: நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதலை தொடர்ந்து, கோவையில் அரசு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமை உணர்வை சமத்துவ சகோதர உணர்வை வளர்த்தெடுக்கும் வண்ணம் கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலைக் கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நின்று சாதி மதம் இனம் மொழி பாலின வேறுபாடு இன்றி வேற்றுமை உணர்வை தகர்க்க வலியுறுத்தினர்.



மேலும் இதில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த மனித சங்கிலி ஏற்பாடு இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...