சுதந்திர தின விழா கொண்டாட்டம் - வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் மூவர்ண கொடியை ஏற்றி, காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கோலாகலமா கொண்டாடப்பட்டது.



கோவை: வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறுதுறைகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சுதந்திர தினத்தை ஒட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



அதன்படி, கோவை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 36 பேர், கோவை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 73 பேர் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - 153 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



பின்னர் காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி‌, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த தேசப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...