விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இந்தாண்டு பிரதிஷ்டை செய்யவுள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி அறிவிப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மகாலில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்,



இந்தியா வல்லரசாக ஊழலற்ற நாடாக திகழ இந்து முன்னணி தற்போது பாடுபட்டு வருவதாகவும் கடந்த காலத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் தான் உடன் இருந்ததாகவும் கூறியதற்கான முரண்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகும் என்றும் தற்போது கணக்கிட்டு பணி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை பிரச்சனை இன்றி மக்கள் அமைதியாக வாழ தீர்வு காணும் முயற்சியில் இந்து முன்னணி தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...