நமது தொழிற் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற் பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை 13.07.2023 முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க வருகின்ற 17ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் (Our Sisters in Our ITI) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஆய்வகங்கள் பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள் பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு வருகை புரிபவர்களைக் கொண்டு Signature Campaign (கையெழுத்துஇயக்கம்) நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் செய்யப்பட்ட அனைத்து Project களை காட்சிப்படுத்தி விருந்தினர்கள் பார்வையிட உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை புரியும் விருந்தினர்களைவ்ஊக்குவிக்கும் விதமாக தொழிற்கல்வி குறித்து பேச்சுப் போட்டி ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவை நடைபெற உள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி நிறைவு செய்து முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களைக் கொண்டு தொழிற் பயிற்சியின் நன்மைகள்

குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கோயம்புத்தூர் மற்றும் ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் சகோதரிகள் பயிற்சி பெறும் நிலையில் உள்ள உறவினர் பெண்கள் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...