தீவனங்களை தின்று விட்டு விநாயகருக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்ற காட்டு யானை - பரபரப்பு!

ஆலாந்துறை அடுத்த காருண்யா நகரில் வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து மாட்டுத் தீவனங்களை தின்ற காட்டு யானை, வீட்டின் முன் இருந்த விநாயகர் சிலைக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: ஆலாந்துறை அருகே காருண்யா நகரில் காட்டு யானை ஒன்று வீட்டின் கேட்டை உடைத்து மாட்டுத் தீவனங்களை தின்றுவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. ஊருக்குள் புகும் காட்டு யானைகள் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.

சில சமயங்களில் மாடுகளுக்காக வைக்கப்பட்டுள்ள தீவனங்களையும் தின்று விட்டு சென்று விடுகின்றன. அதுமட்டுமின்றி வீடு ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் தின்று விட்டு சேதப்படுத்தி சென்று விடுகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் ஆலாந்துறையை அடுத்த காருண்யா நகர் பகுதியில் சத்வா அவென்யூ உள்ளது. இங்கு வழக்கறிஞர் ஜெய்குமார் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. வீட்டுக்கு அருகே மாட்டு கொட்டகையும் உள்ளது.



இந்த வீட்டிற்கு இரண்டு நுழைவாயில் கேட்டுகள் உள்ள நிலையில் இரவு நேரத்தில் வந்த ஒற்றை காட்டுயானை, சின்ன கேட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து மாட்டுக்கொட்டகையில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களை திண்று உள்ளது.

யானை வந்ததால் தெரு நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டும் கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த ஜெய்குமார் டார்ச் அடித்து பார்க்கும் போது காட்டு யானை ஒன்று மாட்டு கொட்டகையில் இருந்த பொருட்களை தின்று கொண்டிருந்துள்ளது.



பின்னர் இவர் டார்ச் லைட் அடிக்கவே அங்கிருந்த மற்றொரு கேட்டை உடைத்து கொண்டு வெளியேறியது. மேலும் வெளியேறும் போது வீட்டின் முன்பக்க சுற்றுசுவரில் பொறிக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலையை பார்த்து தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்துவது போல் சைகை செய்து விட்டு சென்றது.



இச்சம்பவம் ஜெய்க்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதே போன்று 2018ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் இங்கு வந்த யானையும் வினாயகரை பார்த்து தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்துவது போல் சைகை செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...