ஆடி அமாவாசை - பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

ஆடி அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் எள், உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிடவற்றை படையலிட்டு முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.


கோவை: ஆடி அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களது ஆத்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, ஆடி அமாவாசையை முன்னிட்டு, பேரூர் நொய்யல் படித்துறையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்களின் பெயரைச் சொல்லி, எள், உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனமுருகி வழிபட்டனர்.



மேலும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரிசி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் படையல் இட்டும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

குறிப்பாக இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வருகின்ற 2-வது அமாவாசையாகும்.கடந்த அமாவாசையோடு ஒப்பிடும்போது, இந்த அமாவாசைக்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



கோவை மாவட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். நொய்யல் ஆற்றில் நீர் வராததால், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக பைப் நீர் குழாய்களை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் தர்ப்பண வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொடுக்கும் தர்ப்பண இலைகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் வகையில் உள்ளது.

இதைத் தடுக்கும் வகையில், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...