கோவையில் முதன்முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன பிரசவ மையம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன பிரசவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தளம் முழுவுதும் ஒதுக்கப்பட்டுள்ள இம்மையத்தில் கடந்த சில தலைமுறைகளாக காணப்படும் பிரசவச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட உள்ளது.


கோவை: அதிநவீன பிரவச மையத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபடுத்த உள்ளனர்.

கோவை புது சித்தாபுதூரில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில், அதிநவீன பிரசவ மையம் தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் இன்று (18.08.2023) நடைபெற்றது.



எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து, மருத்துவ மையத்தை தொடங்கி வைத்தனர். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித் வழிகாட்டுதலின் படி இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.

"பிரசவங்கள் இதற்கு முன் மருத்துவ உதவியின்றி செய்யப்பட்டது. இம்மையத்தில் கடந்த சில தலைமுறைகளாக காணப்படும் பிரசவச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட உள்ளது.

பொதுவாக 85 முதல் 90 சதவீத பிரசவங்கள், சுகப் பிரசவங்களாக உள்ளன. மீதமுள்ள 10 முதல் 15 சதவீதம் பிரசவங்களுக்கே மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன.



இந்நிலையில் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மிகுந்த பாதுகாப்புடன் பிரசவம் பார்ப்பதற்கு சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கருவுற்ற தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு இம்மருத்துவமனை உறுதுணையாக உள்ளது.



தற்போது தொடங்கப்பட்டுள்ள அதிநவீன பிரசவ மையத்திற்கு ஒரு தளம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.



தாய்மார்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை இம்மருத்துவமனை ஏற்படுத்தி தந்துள்ளது. இச்சேவையில் நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...