பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல்வி உதவித்தொகைகளை அக்கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி அறிமுகப்படுத்தினார்.


Coimbatore: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “Zero G 2026” என்ற இரண்டு நாள் கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சார போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவின் முதல் நாளில் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் நடிகை, பாடகி மடோனா செபாஸ்டியன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கவுரவித்தனர்.

விழாவில் பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், “ஒவ்வொரு முன்னாள் மாணவரின் வீட்டிலிருந்தும் ஒரு தொழில்முனைவோர் உருவாக வேண்டும்” என்பதே கல்விக் குழுமத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு முதல் “நம்பிக்கை கல்வி உதவித்தொகை” மற்றும் “சக்தி கல்வி உதவித்தொகை” ஆகிய இரண்டு புதிய கல்வி உதவித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர உதவும் வகையில் “நம்பிக்கை” கல்வி உதவித்தொகை ஏ.ஐ மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் நோக்கில் “சக்தி” கல்வி உதவித்தொகை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...