கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட முகாமில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.



கோவை: ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்ய 18.08.2023, 19.08.2023, 20.08.2023 ஆகிய 3 தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

கோவையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 1401 முகாம்களில் இதுவரை ஆனைமலையில் 42,731 விண்ணப்பங்களும், அன்னூரில் 43,509 விண்ணப்பங்களும், கோயம்புத்தூர் (வடக்கு)-ல் 1,60,160 விண்ணப்பங்களும், கோயம்புத்தூர் தெற்கு-ல் 75,409 விண்ணப்பங்களும், கிணத்துக்கடவில் 23,346 விண்ணப்பங்களும், மதுக்கரையில் 61,827 விண்ணப்பங்களும், மேட்டுப்பாளையத்தில் 58,072 விண்ணப்பங்களும், பேரூரில் 76,025 விண்ணப்பங்களும், பொள்ளாச்சியில் 62,306 விண்ணப்பங்களும், சூலூரில் 73,300 விண்ணப்பங்களும், வால்பாறையில் 12,577 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இம்முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் சில காரணங்களினால் விண்ணப்ப படிவம் பெறாமலும், சில குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்ப படிவம் பெற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களில் சமர்ப்பிக்காமலும் இருப்பது தெரிய வருகிறது.

மேலும் முதலமைச்சர் உத்தரவின்படி வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புச்சாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்ய 18.08.2023, 19.08.2023, 20.08.2023 ஆகிய 3 தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள மகளிர் ஏற்கனவே விண்ணப்பதிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களாக முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. விண்ணப்ப படிவங்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...