கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்டு வந்த இரவு நேர ரயிலை, மீண்டும் இயக்க அனுப்பப்பட்ட பரிந்துரை கிடப்பில் கிடப்பதாக புகார்

ராமேஸ்வரம் இரவு நேர ரயிலை மீண்டும் இயக்குவதற்கு, 2020 ஜன.21ஆம் தேதியிலேயே, தெற்கு ரயில்வேக்கு சேலம் கோட்ட அலுவலகம், பரிந்துரை அனுப்பியுள்ளது. மூன்றாண்டுகள் முழுமையாக முடிந்தும், இந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை. தெற்கு ரயில்வேயிலிருந்து, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு, அங்கு நிலுவையில் உள்ளதா அல்லது அனுப்பாமலேயே, முடக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.


கோவை: கேஜ் ரயில் பாதை கோவையில் இருந்தபோது, தென் மாவட்டங்களுக்கு ரயில்களை, மீண்டும் இயக்க வேண்டுமென்று, கோவையில் உள்ள தொழில் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தின. அதை ஏற்காமல், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் சில அதிகாரிகள், திட்டமிட்டே கோவையைப் புறக்கணித்து வருவதாக, குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில், சென்னை சென்ட்ரல், எக்மோர் ரயில் சந்திப்புகளுக்கு அடுத்ததாக, அதிக வருவாய் ஈட்டும் கோவை ரயில்வே சேலம் கோட்டத்தில் 45 சதவீத வருவாய் பங்களிப்பைத் தருகிறது.

ஆனால், கோவை சந்திப்பை மறு சீரமைக்கவும், புதிய ரயில்களை இயக்கவும், ரயில்வே துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. கேஜ் ரயில் பாதை கோவையில் இருந்தபோது, தென் மாவட்டங்களுக்கு ரயில்களை, மீண்டும் இயக்க வேண்டுமென்று, கோவையில் உள்ள தொழில் மற்றும் சமூக அமைப்புகள் வலியு றுத்தின. அதை ஏற்காமல், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் சில அதிகாரிகள், திட்டமிட்டே கோவையைப் புறக்கணித்து வருவதாக, குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகாவிலுள்ள பல்வேறு நகரங்களிலிருந்து, ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில்களை இயக்குவதற்கு, தெற்கு ரயில்வே நடவ டிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அகல ரயிலபாதைப் பணிக்காக, கோவையிலிருந்து 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம் இரவு நேர ரயில் நிறுத்தப்பட்டது. பணி முடிந்து ஐந்தாண்டுகள் ஆகியும், மீண்டும் இயக்கப்படவில்லை.

இந்த ரயிலை மீண்டும் இயக்குவதற்கு பல்வேறு அமைப்புகள், மக்கள் பிர திநிதிகள் வலியுறுத்தியும், பதில் கிடைக்கவில்லை. இது தொடர்பான விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கியதில், கோவை-ராமேஸ்வரம் இரவு நேர ரயிலை மீண்டும் இயக்குவதற்கு, 2020 ஜன.,21ஆம் தேதியிலேயே, தெற்கு ரயில்வேக்கு சேலம் கோட்ட அலுவலகம், பரிந்துரை அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. மூன்றாண்டுகள் முழுமையாக முடிந்தும், இந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

தெற்கு ரயில்வேயிலிருந்து, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு, அங்கு நிலுவையில் உள்ளதா அல்லது அனுப்பாமலேயே, முடக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. கோவையிலிருந்து புதிய ரயில்கள் இயக்காமலிருப்பதற்கான காரணங்களை, பல வழிகளிலும் கேட்டபோதும், 'முனைய கட்டுப்பாடுகளையே' (Terminal Constraints), ரயில்வே வாரியம் பதிலாகக் கூறி வருகிறது. ஆனால் போத்தனூர், நல்லாம்பாளையம், பீளமேடு, இருகூர் என பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் இடமிருந்தும், முனைய கட்டமைப்பை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சேலம் கோட்டம் துவங்கிய பின்னும், கடந்த பத் தாண்டுகளில் கோவையில் தேவையான ரயில்வே எதுவுமே மேம்படுத்தப்படவில்லை. அதேபோன்று, செம்மொழி எக்ஸ்பிரஸ் (கோவை-மன்னார்குடி), பொள்ளாச்சி- கோவை ரயில், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கோவையில் வீணாக பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. அவற்றின் பயன்பாடும் அதிகப்படுத்தப்படவில்லை. குறைந்தபட்சம், இந்த ரயில்களை இயக்குவதற்காவது, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...