கோவையில் பாதாள சாக்கடை உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், கணக்கெடுப்பு பணிக்கு வரும் அதிகாரிகளிடம் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் இணைப்பு எண் மற்றும் பாதாள சாக்கடை வைப்புத் தொகை ரசீது உள்ளிட்டவற்றின் நகல்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட தங்கள்‌ பகுதியில்‌ பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளை பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தங்கள்‌ வீட்டிற்கு மாநகராட்சி ஊழியா்கள்‌ கணக்கெடுக்கும் பணிக்கு வரும்போது கீழ்கண்ட ஆவணங்களை நகல்‌ எடுத்து (ஜெராக்ஸ்‌) கணக்கெடுப்பிற்கு வரும்‌ மாநகராட்சி ஊழியர்களிடம்‌ கொடுத்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

1. சொத்துவரி இரசீது எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌ (xerox copy of Property Tax).

2. மின்சார கட்டண இரசீது (Xerox Copy of Latest Electricity Bill) நகல்.

3. குடிநீர் இணைப்பு எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌.

4. பாதாள சாக்கடை தொடர்பான வைப்புத்தொகை ஏற்கனவே செலுத்தி இருந்தால்‌ அதற்கான புகைப்பட நகல்‌.

01.08.2023 முதல்‌ திருத்தியமைக்கப்பட பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளுக்கான கட்டண விபரம்‌ பின்வருமாறு,

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...