செந்தில் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - அன்று நேரில் நிறுத்துமாறு சிறைத்துறைக்கு நீதிமன்றம் ஆணை

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


வரும் 28ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை, அன்றைய தினம் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறைத்துறையினருக்கு நீதிபதி சிவக்குமார் ஆணையிட்டுள்ளார்.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன்14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவரது கைது சரியானதே என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, ஐந்து நாட்கள் காவலில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அன்றே செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கையும், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலைஇல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இன்று நீதிமன்ற காவல் முடிந்தநிலையில் புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி கூறினார். அன்றையே தினம் அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறைத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...