ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணி செய்த கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு!

ஸ்மார்ட்‌ சிட்டி திட்டங்களில்‌ கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌, பந்தையசாலை, வாலாங்குளம்‌, பெரியகுளம்‌, குறிச்சிகுளம்‌ உள்ளிட்ட பல்வேறு குளங்கள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌ பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஸ்மார்ட்‌ சிட்டி பில்ட்‌ எண்விரான்மென்ட்‌ பிரிவில்‌ (Built Environment Category) கோவை மாநகராட்சி முதல்‌ பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணி செய்த, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதல் பரிசுக்கு ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ ஸ்மார்ட்‌ சிட்டி, ISAC (India Smart city Award Contest) விருதுகள்‌ 2022 ஒன்றிய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி மிஷன்‌, இயக்குநரால்‌ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை‌ ஸ்மார்ட்‌ சிட்டி பில்ட்‌ எண்விரான்மென்ட்‌ பிரிவில்‌ முதல்‌ பரிசு பெற்றுள்ளது.

ஆர்‌.எஸ்‌.புரம்‌, பந்தைய சாலை போன்ற பகுதிகளில்‌ சிறந்த மாதிரி சாலைகள்‌ அமைத்தல்‌, வாலாங்குளம்‌, பெரியகுளம்‌, குறிச்சி குளம்‌, முத்தண்ணன்‌ குளம்‌ உள்ளிட்ட பல்வேறு குளங்கள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌, பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர்‌ இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில்‌ 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள்‌ இந்த விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும்‌, திட்ட செயல்பாட்டில்‌ சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதில்‌ கோயம்புத்தூர்‌, இந்தியாவின்‌ தெற்கு மண்டலத்தில்‌ முதல்‌ பரிசு பெற்றுள்ளது.

நகரங்களில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டங்களின்‌ செயலாக்கத்தை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ சிறந்த நகரங்கள்‌, சிறந்த திட்டப்‌ பணிகள்‌ மற்றும்‌ செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள்‌ வழங்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவரால்‌, மத்திய பிரதேச மாநிலம்‌, இந்தார்‌ (Indore) நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 அன்று நடைபெறும்‌ விழாவில்‌ இந்த விருதுகள்‌ வழங்கப்படும்‌.

சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்தும்‌ பல்வேறு மாநிலங்களுக்கு இடையில்‌ நடைபெற்ற தேர்வில்‌ தமிழ்நாடு தேசிய அளவில்‌ இரண்டாவது இடம்‌ பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...