மூலனூர் அருகே ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் கயல்விழி!

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, 5 அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 269 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



தாராபுரத்தை அடுத்த மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 5 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 269 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.00 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,



தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று துவக்கி வைத்தார்கள்.

அனைத்து குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது.

அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. கல்விதான் வாழ்வை மேன்மையடைய செய்யும். மேல்நிலை வகுப்புகள் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் நாம் என்ன படிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தால் அதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்து தர தயாராக உள்ளார்.

இது போன்ற வாய்ப்புகளை மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற அடைப்படையில் தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்பட்டது.

ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு கல்வி அடிப்படையாகும். கல்வியினால் அறிவைப் பெறலாம். பொருளாதரத்தில் முன்னேற்றம் அடையலாம். நமது உரிமையை பெறுவதற்கு கல்வி மிகவும் அவசியம். மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கிறீர்கள்.

இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய கல்வி முறைகள் மாறி வருகிறது. நமது எதிர்காலத்திற்கு எந்த படிப்பு தேவையோ அதை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

அந்த வகையில் இன்றைய தினம், மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 85 மாணவர்களுக்கும், மூலனூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 56-மாணவர்களுக்கும், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 80-மாணவர்களுக்கும், வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 16 மாணவர்களுக்கும், புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியல் பயிலும் 32 மாணவர்களுக்கும் என மொத்தம் 269 மாணவ-மாணவியர்களுக்கு ரூ.13,00,040/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் பத்மநாபன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆனந்தி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி, மூலனூர் பேரூராட்சி தலைவர் தண்டபானி, கன்னிவாடி பேரூராட்சி ரேவதி சுரேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...