கடனை திருப்பி செலுத்தாததால் தாராபுரத்தில் அரசு பள்ளி ஜப்தி… - மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

தாராபுரத்தில் கடனை திருப்பி செலுத்தாததால், அரசு உதவிப்பெறும் பள்ளி நீதிமன்ற ஆணைப்படி ஜப்தி செய்யப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



திருப்பூர்: பள்ளியின் இடத்தை அடமானம் வைத்து அரசு உதவிப்பெறும் பள்ளியின் நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தினரிடம் கடன் வாங்கியுள்ளனர். அந்த கடன் நீண்ட நாட்களாகியும் அவர்கள் அடைக்காத்தால், நீதிமன்ற ஆணைப்படி, பள்ளி ஜப்தி செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினர்.இதற்காக பள்ளியின் இடத்தை ஈடாக கொடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடனை திருப்பி செலுத்தக்கோரி ஐகோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அதனை செலுத்தாததால் பள்ளி இடத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.



இதையடுத்து கோர்ட்டு அமீனா தாராபுரம் வந்து பள்ளியை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பள்ளி இடம் ஜப்தி செய்யப்பட்டது.



இதனால் அங்கு படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...