நீட் தான் தமிழகத்திற்கு பெரிய பிரச்சனை..! - ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பேச்சு

நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும். அப்போது தான் ஆளுநர்கள் அரசியலில் தலையிடுவது போன்ற சூழல் உருவாகாமல் இருக்கும் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: 'ஏழை மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. நானும் வரவேற்கிறேன். எதிர்க்கட்சியினர் விமர்சிக்க தான் செய்வார்கள் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.



கோவை மாநகர பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர்,



மத்திய அரசின் சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார். நொய்யல் நதியை மீண்டும் புணரமைக்க வேண்டும் என நமது அடிகளார் அவர்களும், சிறுதுளி அமைப்பினரும், தன்னார்வ அமைப்புகள் எல்லாம் ஒரு முகமாக நொய்யல் பெருவிழாவை நடத்தி வருகின்றனர்.

அதனுடைய நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருக்கிறேன். நீர்நிலைகளை காப்பாற்றாமல் நிலத்தை காப்பாற்ற முடியாது. நீர் நிலைகளை காப்பாற்றாமல் சுற்றுப்புற சூழலை காப்பாற்ற முடியாது என்கிற அடிப்படையில் அவர்கள் எடுத்திருக்கிற பெரும் முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு இடையேயான மோதல் போக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், 'இது யாருடைய தவறு என்பதை பார்க்க வேண்டும். ஆளுநர்களை அரசியல் பக்கம் இழுக்கிறார்களா? அல்லது ஆளுநர்கள் அரசியல் பக்கம் சாய்கிறார்களா என்பது தான் கேள்வி. நீட்டைப் பொறுத்தவரை யார் கொண்டு வந்தார்கள் என்பதும் தெரியும்.

நீட் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்பதும் தெரியும். தேவையில்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும். அப்போதுதான் ஆளுநர்கள் அரசியலில் தலையிடுவது போன்ற சூழல் உருவாகாமல் இருக்கும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆளுநரை குறை கூறுவதும் ஆளுநரை குறைத்து பேசுவதும் தான் தங்களுடைய அரசியல் என்ற புதிய போக்கை ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மாநில அரசு கடைபிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல.



மாநில அரசு இதனை விட்டுவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. நீட் குறித்து ஏன் ஆளுநரை குறை சொல்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் ஏன் செல்ல மறுக்கிறார்கள்? தமிழக அரசு ஆளுநர் தவறு செய்கிறார் என நினைத்தால் தாராளமாக உச்ச நீதிமன்றம் செல்லலாமே. நீட் குறித்து ஏன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை அரசியலுக்குள் இருப்பது தான் அரசியல் போக்காக உள்ளது' என பதில் அளித்தார். 

'ஏழை மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. நானும் வரவேற்கிறேன். எதிர்க்கட்சியினர் விமர்சிக்க தான் செய்வார்கள். 

நான் ஆளுநராக இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீட் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட்தான் மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உள்ளது. செய்ய முடியாததை செய்வதாக சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுநரை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

பிரதமர் அவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டால் எல்லோரும் வரவேற்பார்கள். நானும் முன் நின்று வரவேற்பேன். சுங்க கட்டணம் உயர்வுக்குப் பின்பு எத்தனை புதிய, பெரிய சாலைகள், நான்கு வழி சாலைகள் வந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். கட்டணத்தை மட்டும் பார்க்கக்கூடாது. இதற்கு முன்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு எவ்வளவு நேரம் செலவானது?. இப்போது எவ்வளவு நேரம் செலவாகிறது? என்பதை பார்க்க வேண்டும். ஒரு பொருளை விரைவாக எடுத்துச் செல்லுவதில் தான் நமது வியாபாரத்தை பெருக்க முடியும். மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற மகத்தான பணிகளில் ஒன்று சாலைகளை விரிவாக்குவதும் அதை சர்வதேச தரத்தில் உயர்த்துவதும் ஆகும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...