பல்லடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்..! வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிட்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாய், தலையனையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ளது செட்டிபாளையம் சாலை. பல்லடம் முதல் கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனிடையே செட்டிபாளையம் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆகிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் குடியிருப்புக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பார் வசதி கிடையாது. இதனால் இங்கு மது வாங்குபவர்கள் சாலையிலேயே மதுவை குடித்துவிட்டு அலங்கோலமாக படுத்துக்கிடப்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பாய் தலையணையுடன் வந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் கடை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருகட்டத்தில் பொதுமக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதில் சொல்லமுடியாமல் மேலாளர் திணறினார்.



பின்னர் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க தனக்கு அதிகாரமில்லை என அடிக்கடி பதில் தெரிவித்ததால் பொதுமக்கள் கடுப்பாகி அதிகாரமில்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தை எதற்காக நடத்த வேண்டும் என கொந்தளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...