தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



கோவை: குழந்தைகளின் சாப்பாடு விஷயத்தில் விளையாடிய தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெற்றோர்கள் காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும் வேலை சுமை காரணமாக பல நேரங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதில் இடையூர் இருப்பதாக இத்திட்டம் குழந்தைகளுக்கு பசியாற்றி பயனளிக்கிறது.

தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது மிகுந்த மனவேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தத் திட்டமானது பெரும்பாலும் வேலையிலேயே குழந்தைகளுக்கு பெருமளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்படி செய்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...