வரும் 6ம் தேதி முதல் ஆவின் பால் பாக்கெட் ஊதா நிறத்திற்கு மாற்றம்.. கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட், இனி ஊதா நிறத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.


கோவை: வரும் 6ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் ஒரே வண்ண பாக்கெட்டுகளை அறிமுகம் செய்யும் வகையில், ஆவின் COW MILK (3.5FAT - 8.5 SNF) என்ற பெயருக்கு பதிலாக ஆவின் டிலைட் (Aavin delight) (3.5FAT-8.5 SNF) என்ற பெயரில் ஊதா நிற (purple) பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படவுள்ளது.

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் ஊதா நிறத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் கடந்த 01.02.2023 தேதி முதல் நான்காம் தேதி வரை ஆவின் பசும்பால் COW MILK (3.5 FAT - 8.5 SNF) என்ற பெயரில் 250ml, 500 ml ஆகிய அளவுகளை கொண்ட பால் பாக்கெட்டுகள் பச்சை நிற வண்ணத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வரும் 6ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் ஒரே வண்ண பாக்கெட்டுகளை அறிமுகம் செய்யும் வகையில், ஆவின் COW MILK (3.5FAT - 8.5 SNF) என்ற பெயருக்கு பதிலாக ஆவின் டிலைட் (Aavin delight) (3.5FAT-8.5 SNF) என்ற பெயரில் ஊதா நிற (purple) பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படவுள்ளது.

மேலும் பாலின் கொழுப்பு மற்றும் இதர சத்துகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால், இந்த ஆவின் டிலைட் (Aavin delight-3.5% FAT-8.5% SNF) ஊதா நிற (purple) ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...