அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் தண்ணீர் வருவதை தடுக்கும் நபர்..!! நடவடிக்கை வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு..!

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோபுராசிபுரம் மற்றும் கூளேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் 746 குட்டைகளை நிரப்ப வேண்டியும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ஆவணம் செய்ய வேண்டியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை: திருப்பூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து அன்னூர் சிறுமுகை சாலைக்கு இணைப்பு சாலை வழியாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குழாய் அமைத்து 746 குட்டைக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் மாரநாயக்கர்(விவசாயி) என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோபுராசிபுரம் மற்றும் கூளேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் 746 குட்டைகளை நிரப்ப வேண்டியும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ஆவணம் செய்ய வேண்டியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தங்கள் பகுதியில் உள்ள குட்டைக்கு திருப்பூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து அன்னூர் சிறுமுகை சாலைக்கு இணைப்பு சாலை வழியாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குழாய் அமைத்து 746 குட்டைக்கு தண்ணீர் வருவதை மாரநாயக்கர்(விவசாயி) என்பவர் தடுப்பதாக அத்திக்கடவு அவினாசி திட்ட பொறியாளர் சாலமன் கூறுவதாகவும், அந்த குட்டைகளுக்கு ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய் சோலார் பேனல் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் அவர் தடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தங்கள் பகுதியில் உள்ள சுமார் 100 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே தங்கள் ஊருக்கு அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் அந்த 746 குட்டைகளை நிரப்பவும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க ஆவணம் செய்யுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மாரநாயக்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...