கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - கோவையில் ரூ.72.58 மதிப்பில் இயந்திரங்கள் வழங்கல்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கோவையில் 72.58 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.



கோவை: 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.



தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கிராம மக்களுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.



அதன்படி கோவை மாவட்டத்தில் 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்கினார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...