கோவையில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம்!

கோவை கிழக்கு மண்டலத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியுள்ள இடத்தின் குப்பையை சட்டவிரோதமாக தெருக்களில் கொட்டியதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.4 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.


கோவை: கோவையில் சட்டவிரோதமாக தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவது தொடா்பாக மாநகராட்சி பணியாளா்களால்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌ கடந்த 30.08.2023 அன்று கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.50க்கு உட்பட்ட ஹிந்துஸ்தான்‌ கல்லூரி பின் பகுதியில்‌ அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்‌ நிறுவனத்தில்‌ 200 மேற்பட்டோர்‌ தங்கியுள்ளனர்‌.

அவர்களிடமிருந்து உருவாகும்‌ குப்பைகளை மீனா எஸ்டேட்‌ மற்றும்‌ ஹிந்துஸ்தான்‌ அவென்யூ பகுதிகளில்‌ கொட்டியது கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவின் படி, சுகாதார ஆய்வாளர்‌ ஜீவமுருகராஜ்‌ சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம்‌ அபராதமாக விதிக்கப்பட்டு, வங்கி வரைவோலையாக இன்று (04.09.2023) பெறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌, வணிக நிறுவனத்தினர்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, அதற்கென தனியே வைக்கப்பட்டுள்ள குப்பைத்‌ தொட்டிகளில்‌ போடுமாறும்‌, இதனை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...