தில்லி ஜெ.என்.யு. மாணவர் தற்கொலை குறித்து மத்திய அரசு நடவடிக்கை கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று (மார்ச் 13) திடீரென முத்துகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தில்லி ஜெ.என்.யு-வில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதனிடையே, கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதைத் தொடர்ந்து அலுவலக வாயில் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாயில் முன்பு அமர்ந்த மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜாதிய கட்டமைப்பு காரணமாகவே இவ்வாறு தற்கொலைகள் தொடர்ந்து வருவதாக தெரிவித்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தெரிவித்தனர்.



இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...