சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்; மேயர் கல்பனா தொடங்கி வைப்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற PM-SVANidhi திட்டத்தின் கீழ்‌ சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாமினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளார் மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினர்.


கோவை: சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கும்‌ இந்த சிறப்பு முகாமில்‌ வங்கி கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வழங்கப்படுவதாகவும், முதற்கட்டமாக ரூ.10,000,/- இரண்டாம்‌ கட்டமாக ரூ.20,000/-, மூன்றாம்‌ கட்டமாக ரூ.50,000/- என மூன்று கட்டங்களாக கடனுதவி வழங்கப்படுவதாகவும் மேய்ர கல்பனா தெரிவித்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற PM-SVANidhi திட்டத்தின்கீழ்‌ சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்‌ வழங்கும்‌ முகாமினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ , ஆகியோர்‌ தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்கள்‌.



மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சாலையோர வியாபாரிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சார்பில்‌ சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கும்‌ இந்த சிறப்பு முகாமில்‌ வங்கி கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக ரூ.10,000,/- இரண்டாம்‌ கட்டமாக ரூ.20,000/-, மூன்றாம்‌ கட்டமாக ரூ.50,000/- என மூன்று கட்டங்களாக கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும்‌ உங்களுக்கு கட்டணமின்றி பதிவு செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ செய்துள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்‌ உதவி பெறுவது குறித்து ஏதேனும்‌ சந்தேகம்‌ எனில்‌ மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி பயன்‌ பெறலாம்‌. உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ செய்து கொடுக்கும்‌. இந்த கடன்‌ வழங்கும்‌ முகாமினை பயன்படுத்தி தங்களை பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்‌. அனைவருக்கும்‌ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்‌” என ம மேயர்‌ கூறினார்.

அதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, அவர்கள்‌ தலைமையுயாற்றியதாவது, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சார்பில்‌ சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கும்‌ இந்த சிறப்பு முகாமில்‌ வங்கி கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.10,000/- இரண்டாம்‌ கட்டமாக ரூ.20,000,-, மூன்றாம்‌ கட்டமாக ரூ.50,000/- என மூன்று கட்டங்களாக கடனுதவி வழங்கப்படுகிறது.

சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையிலும்‌ PM-SVANidhi திட்டத்தின்கீழ்‌ சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்படுவது குறித்தும்‌, இந்த சிறப்பு முகாம்‌ நடத்தப்படுகிறது.

கடன்‌ பெறும்‌ வியாபாரிகள்‌ கடனைத்திருப்ப செலுத்தும்‌ பொழுது பணமாக செலுத்தாமல்‌ கியூ.ஆர்‌.கோடு செயலியை பயன்படுத்தி டிஜிட்டல்‌ முறையில்‌ செலுத்தினால்‌ அதற்கான கட்டத்தொகை திரும்ப உங்களுக்கு வழங்கப்படும்‌. சாலையோர வியாரிகள்‌ கடன்‌ பெற தனியார்‌ கணினி மையங்களை நாடாமல்‌ மாநகராட்சியை அணுகி இலவசமாக விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ உங்களுக்கு கட்டணமின்றி பதிவு செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ செய்துள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட மாநகராட்சி அலுவலர்கள்‌ அடையாள அட்டை காண்பித்து கணக்கெடுப்புக்கு வருவார்கள்‌. அவர்களிடம்‌ மட்டுமே உங்களது தகவல்களை தெரிவிக்க வேண்டும்‌.

தனியார்‌ தரும்‌ அடையாள அட்டைகளை பணம்‌ கொடுத்து வாங்க வேண்டாம்‌. சாலையோர வியாபாரிகளுக்கு போலியாக அடையாள அட்டை வழங்கியவர்கள்‌ மீது காவல்‌ துறையில்‌ புகார்‌ தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள்‌ இந்த கடன்‌ வழங்கும்‌ முகாமினை பயன்படுத்தி தங்களை பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்‌. அனைவருக்கும்‌ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்‌” என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்தார்.

இம்முகாமில்‌ பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, மாநகர நல அலுவலர்‌ மரு.தாமோதரன்‌, முன்னோடி வங்கி மேலாளர்‌ ராஜ்குமார்‌, மாநகராட்சி சாலையோர வியாபாரிகள்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ பாலசுந்தரம்‌, வங்கி மேலாளர்கள்‌ மற்றும்‌ சாலையோர வியாபாரிகள்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...