சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

சனாதனம் மற்றும் இந்து தர்மத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சனாதனத்திற்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு திராவிட கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தும், கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மற்றும் திராவிட இயக்கங்களை கண்டித்து கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியினர் 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது,

தொடர்ந்து திமுக இந்து மதத்தைப் பற்றியும், சனாதனத்தை பற்றியும், இழிவாக பேசி வருகிறது. தேர்தல் சமயங்களில் மட்டும் இந்துக்களின் ஓட்டை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி இருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...