உலக மின்சார வாகன தினம்..!! கோவையில் மின்சார வாகன பேரணி.! ஆட்சியர் தொடங்கி வைப்பு.!

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றன.



உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று உலக மின்சார வாகன தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கண்காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கோவை கொடிசியா வளாகத்திலும் மின்சார வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக மின்சார தினமான இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.



SSEM- Society for Smart E-Mobility சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றது.



இதில் பல்வேறு தனியார் மின்சார வாகன தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தற்போதுள்ள அதிநவீன மின்சார வாகனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...