தாராபுரத்தில் ரூ.8 லட்சம் கொள்ளை..!! காரில் இருந்த பணத்தை எடுத்தவர்கள் யார் என போலீசார் விசாரனை

தாராபுரம் அருகே வீட்டு வேலைக்கு நகையை அடமானம் வைத்து வங்கியில் ரூ.8 லட்சம் பெற்று சென்ற தொழிலதிபரின் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.


திருப்பூர்: நகைகளை அடகு வைத்து காரில் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை, தன்னை பின்தொடர்ந்து வந்த ஒருவர் வேகமாக எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதாக பணத்தை பறிக்கொடுத்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த துலுக்கனூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (40) தொழிலதிபர். இவர் தாராபுரத்தில் லாரி டிரான்ஸ் போர்ட் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இவர் தாராபுரம் பழனி சாலையில் தேர்பட்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். கட்டுமான பணிகளுக்காக பணம் தேவைப்பட்டதால் மதியம் தனக்கு சொந்தமான தங்க நகையை தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள (பேங்க் ஆப் பரோடா) தனியார் வங்கியில் அடகு வைத்து 8-லட்சம் கடன் பெற்றார். பணத்தை வங்கியில் இருந்து பெற்றுக் கொண்டு தனது கார் பின் டிக்கியில் வைத்து கொண்டு தாராபுரத்தில் இருந்து தனது வீட்டின் கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக தாராபுரம்-பழனி சாலையில் உள்ள தேர்பட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் தேர்பட்டி வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு கட்டுமான பணிகளை பார்வையிட சென்றுள்ளார். பின்னர் வந்து காரில் உள்ள பணத்தை எடுக்க கார் டிக்கியை திறந்த போது பையில் வைத்திருந்த பணம் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பாண்டியன் அலங்கியம் போலீசில் புகார் அளித்தார்.



இது குறித்து பாண்டியன் கூறுகையில், யாரோ என்னை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காரில் வைத்திருந்த 8-லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வேக வேகமாக ஓடி சென்று இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றதாக பாண்டியன் தெரிவித்தார்.

வீட்டின் கட்டுமான பணிகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வீட்டின் கட்டுமான பணியை செய்து வந்தவரிடம் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் தேர்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...