அரசுப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்..!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு.!

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை என அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் வந்து பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: வகுப்பறைகள் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்தும் நிலையில் இருப்பதால்,மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடம் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.



கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட இல்லை எனவும் அவற்றை கட்டித் தர வலியுறுத்தி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழி கல்வி என இரண்டு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைத்து வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும், மாணவர்கள் பள்ளியின் வெளியில் உள்ள பொதுக் கழிவறையையே உபயோகப்படுத்துவதாகவும் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கென தனி கழிப்பறை இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

அங்குள்ள வகுப்பறைகளும் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த பெற்றோர்கள், மழைக்காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறினர்.

பள்ளி மாணவர்களுக்கென விளையாட்டு மைதானங்களும் இல்லை என தெரிவித்த அவர்கள் இது குறித்து பலமுறை அங்குள்ள அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...