சனாதனம் விவக்காரத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!! கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து அன்னையர் முன்னணி அமைப்பு புகார்.!

சனாதனம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரி இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கேட்டுகொண்டனர்.

சென்னையில் கடந்த இரண்டாம் தேதி சனாதனம் ஒழிப்பு மாநாட்டை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். சிலவற்றை நாம் ஒழிக்க தான் ஆக வேண்டும். எதிர்க்க முடியாது கொசு டெங்கு மலேரியா கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்து கட்ட வேண்டும் அப்படித்தான் இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி என்று பேசியிருந்தார்.



இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...